/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் அரியலுார் பகுதிகளில் தீவிர பிரசாரம்
/
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் அரியலுார் பகுதிகளில் தீவிர பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் அரியலுார் பகுதிகளில் தீவிர பிரசாரம்
அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் அரியலுார் பகுதிகளில் தீவிர பிரசாரம்
ADDED : ஏப் 16, 2024 06:38 AM

சிதம்பரம் : சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், அரியலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட திருமானூர் ஒன்றிய கிராமங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரியலூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட சாத்தமங்களத்தில், அரியலூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில், வேட்பாளர் சந்திரகாசன் மற்றும் கட்சியினர் இரட்டை இலை சின்னத்திற்கு, வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
அப்போது அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அருணாச்சலம், விவசாய பிரிவு இணை செயலாளர் ராஜமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ., இளவழகன், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் ராமஜெயவேல், திருமானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவழகன், முன்னாள் சேர்மன் சீனுவாசன், அருங்கால் ஜோதிவேல், வெங்கடாசலம் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தாமரை ராஜேந்திரன் பேசுகையில், மிகவும் எளிமையான வேட்பாளர சந்திரகாசன். உங்கள் குறைகளை கேட்டறிந்து, லோக்சபாவில் கோரிக்கை வைத்து நிறைவேற்றி தருவார். அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களை தி.மு.க., ஆட்சி வந்த பின்பு நிறுத்தப்பட்டுள்ளது. பழனிசாமி தலைமையில் மீண்டும் ஆட்சி அமையும். எங்கள் வேட்பாளர் சந்திரகாசனுக்கு, இரட்டை இலை ஓட்டளித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

