/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., சாதனைகளை விளக்கி வேட்பாளர் சந்திரகாசன் ஓட்டு சேகரிப்பு
/
அ.தி.மு.க., சாதனைகளை விளக்கி வேட்பாளர் சந்திரகாசன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., சாதனைகளை விளக்கி வேட்பாளர் சந்திரகாசன் ஓட்டு சேகரிப்பு
அ.தி.மு.க., சாதனைகளை விளக்கி வேட்பாளர் சந்திரகாசன் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 02, 2024 04:05 AM

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், ஜெயங்கொண்டம் சட்டசபை தொகுதிக்குபட்ட ஆண்டிமடம் ஒன்றிய பகுதிகளில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன், முன்னாள் முதல்வர் பழனிசாமி பிரசாரத்திற்கு பிறகு, தீவிர ஒட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அரியலுார் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிமடம், விளந்தை, வரதராஜன் சி.பேட்டை, கவரப்பாளையம், பெரியாக்குறிச்சி, ஓலையூர், சிலுவைச்சேரி,பெரிய தத்தூர், வாரியங்காவல், குவாகம் கொடுக்கூர், தேவனூர், மேலுார் உட்பட மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராம ஜெயவேல் ஆகியோர் உடன் சென்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் அரியலூர் அரசு மருத் துவக்கல்லூரி, ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி மற்றும் பெண்களுக்கு திருமண உதவித்திட்டம், தாலிக்கு தங்கம், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப் பட்டது குறித்து பொதுமக்களிடம் கூறி, ஒட்டு சேகரித்தனர்.
மாவட்ட அவைத் தலைவர் ராம ஜெயலிங்கம், இளைஞரணி துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மாவட்ட துணை செயலாளர் தங்கபிச்சமுத்து. ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன், மருதமுத்து. வரதராஜன்பேட்டை நகர செயலாளர் ஸ்டீபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

