/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
/
சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
சிதம்பரம் தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டிய அ.தி.மு.க.,
ADDED : ஏப் 07, 2024 04:35 AM

சிதம்பரம் : சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களிடம் அ.தி.மு.க., நிர்வாகிகள் ஓட்டு சேகரித்தனர்.
அ.தி.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை, மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் முக்கிய நிர்வாகிகள், சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள தீட்சிதர்களிடம் ஆதரவு திரட்டினர்.
நிகழச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் குமார் ,பொருளாளர் தோப்பு சுந்தர், நகர செயலாளர் செந்தில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமாறன், பாசறை செயலாளர் சண்முகம் ,இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, நிர்வாகிகள் சுரேஷ்பாபு , சங்கர், வீரமணி, பன்னீர்செல்ம், தில்லை செல்வம், ரவிச்சந்திரன், சரவணன், மணிராஜ், வெங்கடேசன், தங்கமான் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

