/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதைப் பொருளும், ஊழலும் மலிந்துள்ளது தி.மு.க., ஆட்சி குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாடல்
/
போதைப் பொருளும், ஊழலும் மலிந்துள்ளது தி.மு.க., ஆட்சி குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாடல்
போதைப் பொருளும், ஊழலும் மலிந்துள்ளது தி.மு.க., ஆட்சி குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாடல்
போதைப் பொருளும், ஊழலும் மலிந்துள்ளது தி.மு.க., ஆட்சி குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சாடல்
ADDED : ஏப் 13, 2024 05:12 AM

புவனகிரி: 'மக்கள் சேவையை சிறப்பாக செய்திட, எளியவரான அ.தி.மு.க., வேட்பாளரை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்' என புவனகிரியில், மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசினார்.
புவனகிரி ஐயப்பன் கோவில் வளாகத்தில் பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசுகையில், 'ஜெ., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை, ஸ்டாலின் மூடு விழா கண்டதுடன், பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் தருவாக வாக்குறுதி அளித்து பின், தகுதியானவர்களுக்கு எனக்கூறி பெண்களை அலைய விட்டார்.
அவருடைய கட்சியினர் பெண்களை இழிவாக நடத்துகின்றனர். இந்த ஆட்சியில் போதை பொருட்களும், ஊழலும் மலிந்துள்ளது. இவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இந்த தொகுதிப் பக்கம் தலைகாட்டாத வேட்பாளர் தற்போது எந்த முகத்தோடு ஓட்டுக்கேட்டு வருகிறார் என்பதை உணர்ந்து, எளியவர், மக்களுக்கு உழைக்கத் தயார் நிலையில் உள்ளவரும், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியால் அடையாளம் காட்டப்பட்டுள்ள சந்திரகாசனை அதிக ஒட்டு வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும்' என்றார்.
மாவட்ட ஜெ., பேரவைச் செயலாளர் உமா மகேஸ்வரன், சேர்மன் சிவப்பிரகாசம், துணைச் சேர்மன் வாசுதேவன், மாவட்ட மாணவரணி வீரமூர்த்தி, இணைச் செயலாளர் லட்சுமி, நகர செயலாளர் செல்வகுமார், ஒன்றிய பொருளாளர் தங்கமணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சங்கர்.
மாவட்ட பிரதிநிதி ஜெயராஜ், தொழில் நுட்ப பிரிவு ஜெயராஜ், கவுன்சிலர் ஜெயப்பிரியா ரகுராமன், மனோகர், முன்னாள் கவுன்சிலர் நாகராஜன் தே.மு.தி.க., புவனகிரி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் பானுச்சந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மேல்புவனகிரி பேரூராட்சியில் துவங்கி, ஒன்றிய கிராமங்கள் முழுதும் ஓட்டு சேகரித்தனர்.

