/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டேக்வாண்டோ வீரருக்கு ஏ.டி.எஸ்.பி., பாராட்டு
/
டேக்வாண்டோ வீரருக்கு ஏ.டி.எஸ்.பி., பாராட்டு
ADDED : ஏப் 16, 2024 10:43 PM
கடலுார்,- இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்திற்கு தேர்வு செய்யப்பட்ட டேக்வாண்டோ வீரரை லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., பாராட்டினார்.
கடலுார் அடுத்த தாழங்குடா கிராமத்தை சேர்ந்தவர் பவிக் ஷன்; டேக்வாண்டோ வீரரான இவர், திருவனந்தபுரம் இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்தில் தங்கி கல்வி மற்றும் விளையாட்டு கற்றுக்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், கடலுார் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக இந்திய விளையாட்டு ஆணையத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவரை, கடலுார் அண்ணா விளையாட்டு அரங்கில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் தேசியப் போட்டியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
அப்போது, பயிற்சியாளர்கள் இளவரசன், ஞானமுருகன், ராஜேஷ், பாபு, ஓய்வுபெற்ற சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் விளையாட்டு வீரர்கள் உடனிருந்தனர்.

