ADDED : ஜூலை 26, 2024 04:31 AM

கடலுார்: பாரதிய ஜெயின் சங்கம் சார்பில் குறிஞ்சிப்பாடி அடுத்த அடூர்குப்பத்தில் உள்ள 3.8 ஏக்கர்பரப்பளவிலான புது ஏரி சீரமைப்பு பணிக்கான பூமி பூஜை நடந்தது.
குறிஞ்சிப்பாடி பி.டி.ஓ., சுதா தலைமை தாங்கினார். உதவி பொறியாளர் ரத்தினகுமார் முன்னிலை வகித்தார். கடலுார் மாவட்ட சங்கட்டனா தலைவர் சித் தார்த் மேத்தா வரவேற்றார்.
குறிஞ்சிப்பாடி சங்கட்டனா தலைவர் தர்மசந்த் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் சித்தார்த் மேத்தா கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் ஆடுர்குப்பம், கருங்காலி, வாணாதிராயபுரம் ஆகிய மூன்று குளங்களை சீரமைக்க முடிவுசெய்யப் பட்டது.
முதலில் அடூர்குப்பம் புது ஏரியை சீரமைத்து மக்கள் பயன்பாட்டிற்குகொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் விருப்பாச்சி ஊரட்சி தலைவர் வேல்முருகன் மேற்பார்வையில் நடக்கிறது.
இதை தவிர தமிழகத்தில் சென்னை, கோயம்புத்துார், சேலம், மதுரை, காஞ்சிபுரம், விருதுநகர் உட்பட்ட 10 மாவட்டத் தில் உள்ள ஏரிகள் குளங்களை துார்வாரதிட்டமிடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இதுவரை 126குளங்கள் துார்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
அப்போது, பாரதிய ஜெயின் சங்கட்டனா செயலாளர் நிதேஸ்குமார், காசோலர் தீபக், உறுப்பினர் அசக், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு கலந்து கொண்டனர்.

