/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்தல் சுருக்குமுறை திருத்தம் சிதம்பரத்தில் ஆலோசனை
/
தேர்தல் சுருக்குமுறை திருத்தம் சிதம்பரத்தில் ஆலோசனை
தேர்தல் சுருக்குமுறை திருத்தம் சிதம்பரத்தில் ஆலோசனை
தேர்தல் சுருக்குமுறை திருத்தம் சிதம்பரத்தில் ஆலோசனை
ADDED : ஆக 29, 2024 11:33 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில் தேர்தல் சிறப்பு சுருக்குமுறை திருத்தம் குறித்த அனைத்து கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
சிதம்பரத்தில், தேர்தல் சிறப்பு சுருக்கு முறை திருத்தம், முதற்கட்ட பணியாக, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்க்கும் பணி மற்றும் வாக்குச்சாவடி பகுப்பாய்வு செய்வது குறித்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது
சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு சப் கலெக்டர் நேர்முக உதவியாளர் புகழேந்தி தலைமை தாங்கி, தேர்தல் சிறப்பு சுருக்கும் முறை திருத்தம் குறித்த பணிகளின் முன்னேற்பாடுகள் குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் மூன்று சட்டசபை தொகுதிகளின் துணை தாசில்தார்கள் இளவரசி, செல்வலட்சுமி, வேலுமணி, சுமதி, தேர்தல் பிரிவு அலுவலர்கள் ரவி, சூர்யா, காமராஜ், ஜெயவீரபாண்டியன் மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.