நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பத்மநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலர் உலக நாதன், ஒன்றிய செயலர் குமார், நகர செயலர் திருமுருகன் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் சீனிவாசன் வரவேற்றார். துணை தலைவர் கொளஞ்சிநாதன், நகர பொருளாளர் சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில், வரும் 22ம்தேதி பெண்ணாடம், சோழன் நகர் ஆதி-திராவிட மக்களுக்கு வீட்டுமனை வழங்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணை செயலர் கர்ணன் நன்றி கூறினார்.