கடலுார் : கடலுாரில் மாநகர பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒருங்கிணைப்பாளர்ரவி தலைமை தாங்கினார்.இணை ஒருங்கிணைப்பாளர் குரு ராமலிங்கம் வரவேற்றார்.தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர்சுப்புராயன், மன்சூர்,சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சிவாஜி கணேசன்முன்னிலை வகித்தனர்.
சட்ட ஆலோசகர் திருமார்பன்,உலக திருக்குறள் பேரவை தலைவர் பாஸ்கரன்,வள்ளலார் தொண்டு மைய தலைவர் ராஜதுரை,தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் லெனின் பேசினர்.
கடலுார் மாநகர பகுதிலேயே புதிய பஸ் நிலையம் அமைக்க வலியுறுத்தி வரும் 15ம் தேதி காலை 10:00 மணிக்கு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்துவது.
கடலுார் மாநகரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கடலுார்-புதுச்சேரி ரயில்வே திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
வாணிதாசன் நன்றி கூறினார்.