/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது
/
மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது
மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது
மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்திய பாசக்கார தந்தை கைது
ADDED : மே 19, 2024 04:21 AM
கடலுார், : குடிப்பதை தட்டிக்கேட்ட மகனை கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தி கொலை செய்ய முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த உச்சிமேடு தியாகு நகரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன் 43; கூலித் தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.
நேற்று முன்தினம் முத்துக்குமரன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தவர் தகராறு செய்தார். இதனை அவரது மகன் முகேஷ், 17; கண்டித்தார்.
இதனால், ஆத்திரமடைந்த முத்துக்குமரன், தனது மகன் முகேைஷ ஆபாசமாக திட்டி, அருகில் கிடந்த கத்தரிக்கோலால் கழுத்தில் குத்தினார். படுகாயம் அடைந்த முகேஷ் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து முத்துக்குமரனை கைது செய்தனர்.