/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்தநாள் விழா
/
அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்தநாள் விழா
அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்தநாள் விழா
அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்தநாள் விழா
ADDED : மே 01, 2024 07:21 AM

பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், அகஸ்தியம் பவுண்டேஷன் நிறுவனர் டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம் பிறந்த நாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். பு.முட்லுார் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, பொதுமக்கள் சார்பில், ஈஸ்வர் ராஜலிங்கத்திற்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து ஏரளமான பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
விழாவில், பாண்டியன் எம்.எல்.ஏ., பங்கேற்று, டாக்டர் ஈஸ்வர் ராஜலிங்கம், அவரது மனைவி அர்ச்சனா ஈஸ்வர் ஆகியோரை பாராட்டி வாழ்த்தி, பேசினார். விழாவில், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணைச்செயலாளர் ரங்கம்மாள், ஒன்றிய அவை தலைவர் ரங்கசாமி, முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் வசந்த், ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தஜோதி சுதாகர், முன்னாள் துணை சேர்மன் முடிவண்ணன், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், ஊராட்சி தலைவர் ராம் மகேஷ், ராமர், முத்துக்குமாரசாமி, சீனு என்கிற ராமதாஸ், கண்ணதாசன், சதீஷ்குமார், பாலாஜி, முருகன், ரவிச்சந்திரன், ஆசைதம்பி மற்றும் பொதுமக்கள், ஆன்மீக நண்பர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்று வாழ்த்தினர்.
ஏற்பாடுகளை, அர்ச்சனா ஈஸ்வர், லேக்நாத் ஈஸ்வர், ரிஷிநாத் ஈஸ்வர் ஆகியோர் செய்திருந்தனர்.