/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர எஜன்டுகள் 'ரெடி'
/
பொது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர எஜன்டுகள் 'ரெடி'
பொது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர எஜன்டுகள் 'ரெடி'
பொது கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து வர எஜன்டுகள் 'ரெடி'
ADDED : மார் 28, 2024 11:14 PM
மந்தாரக்குப்பம்: பொதுக்கூட்டத்திற்கு ஆட்களை அழைத்து சென்று வர ஏஜன்டுகள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
லோக்சபா தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பொதுமக்களிடம் ஓட்டு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
அரசியல் கட்சி தலைவர் பொதுக்கூட்டத்திற்கு வரும்போது கூட்டத்தை அதிகமாக காண்பிக்க வேண்டி வேட்பாளர்கள் விரும்புகின்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டை பெற வேண்டி கூட்டத்தை கூட்டி, மக்கள் மத்தியில் தங்களது கட்சி குறித்து பரபரப்பாக பேசப்பட வேண்டும் என நினைக்கின்றனர்.
இதனிடையே பொதுக்கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வர கிராமம், நகரப் பகுதிகளில் தனி ஏஜன்டுகள் உள்ளனர். அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களுக்கு ஏற்ப தேவையான நபர்களை அழைத்து வரவும், கட்சிகளுக்கு தகுந்தாற்போல் நபருக்கு 200 முதல் 300 ரூபாய் எனவும், வெளியூர் கூட்டங்களுக்கு ஆட்கள் அழைத்து செல்ல வேண்டும் எனில், சாப்பாடு மற்றும் வாகன வசதி செய்து தரவேண்டும் என அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேசி, அட்வான்ஸ் வாங்கி கொண்டு ஆட்களை அழைத்து செல்லும் பணியில் தற்போது படு பிசியாக உள்ளனர்.

