/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மு.பட்டி ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி கூட்டம்
/
மு.பட்டி ஊராட்சியில் வேளாண் வளர்ச்சி கூட்டம்
ADDED : ஜூன் 20, 2024 08:58 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மு.பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கூட்டம் நடந்தது.
ஊராட்சித் தலைவர் ஜெகப்பிரியா வந்தகுமார் தலைமை தாங்கினார். வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் 'ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு இரு மடங்கு வருவாய் அதிகரிக்கும். தமிழக அரசு வழங்கி வரும் மானியங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார், வேளாண் அலுவலர் சுகன்யா, வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி காயத்ரி ஆகியோர் பழ மரக் கன்றுகள் வழங்கல், காய்கறி திடல் அமைத்தல் உள்ளிட்ட மானிய விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
கிராம அளவிலான வேளாண் வளர்ச்சிக்குழு அமைத்து பயன்பெறுவது, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தின் செயல்பாடு, விவசாயிகளுக்கு வழங்கும் பயிற்சிகள் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
முன்னதாக, ஸ்டேட் பாங்க் மேலாளர் சாமிஅம்மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் வேலுமணி ஆகியோர் விவசாய கடன் அட்டை பயன்பாடு குறித்து விளக்கமளித்தனர்.