/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் விஞ்ஞானிகள் வயல்களில் ஆய்வு
/
வேளாண் விஞ்ஞானிகள் வயல்களில் ஆய்வு
ADDED : ஜூலை 04, 2024 12:46 AM

சேத்தியாத்தோப்பு,: கீரப்பாளையம் வட்டாரங்களில் குறுவை சாகுபடி நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல் குறித்து வேளாண் விஞ்ஞானிகள் வயல் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் நடப்பு குறுவை பருவத்தில் 7,500 ஏக்கரில் நெல்சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதில் தற்போது ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலால் பெரும்பாலான பகுதிகளில் பயிர்களில் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது. கடலுார் கரும்பு ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் துரைசாமி, நோயியல் துறை பேராசிரியர் ராஜ்குமார் ஆகியோர் வெள்ளியக்குடி, சி.சாத்தமங்கல், வெய்யலுார் உள்ளிட்ட வயல்வெளியில் ஆய்வு செய்தனர். ஆய்வில் நெற்பயிர்களை தாக்கும் ஆனைக்கொம்பன் ஈ புழுக்கள் துார்களை தாக்கி தண்டுகளை துளைத்து வளரக்கூடியது. தாக்குதல்களுக்குள்ளான துார்களிலிருந்து நெற்கதிர்கள் வெளியே வராமல் வளர்ச்சி குன்றி வெங்காய இலை போல் அல்லது வெள்ளித்தண்டு போல காட்சியளிக்கின்றன.
இதனை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு கார்போசல்பான் 25 சதவீத இசி 400 மில்லி லிட்டர் அல்லது பிப்ரோனில் 5 எஸ்சி 400 மில்லி லிட்டர் அல்லது தையமித்தக்சாம் 25 சதவீத டபுள்யுஜி 40 கிராம் ஒட்டும் திரவம் டேங்கிற்கு 2 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளிடம் அறிவுறுத்தினர்.
கீரப்பாளையம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், வேளாண் அலுவலர் சிவப்பிரியன், விவசாயிகள் உடனிருந்தனர்.