ADDED : மார் 28, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : பெரம்பலுார் ரோவர் வேளாண் கல்லுாரி மாணவர்கள், திட்டக்குடி அடுத்த பட்டூர் கிராமத் தில் தங்கி ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்கள் சூர்யா, விஷ்ணு, தமிழரசன், தமிழினியன், தினேஷ்குமார், உதயகுமார், யாகேஷ் ஆகியோர் எள் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். குழு ஒருங்கிணைப்பாளர்கள் பிரியதர்ஷன் மற்றும் ராஜ்குமார் வழிகாட்டுதலின் படி, விவசாயிகளுக்கு எள் பயிர் சாகுபடி குறித்து நுணுக்கங்களையும், களை மேம்பாடு, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

