ADDED : ஏப் 09, 2024 11:19 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பில் தங்கி பயிற்சி பெறும் வேளாண் மாணவர்கள், வயல்வெளி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
சேத்தியாத்தோப்பில் திட்டக்குடி அருகே உள்ள ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர் குழுவினர் கிராமத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
அந்த மாணவர்கள், மாணவர்கள் வேளாண் அனுபவம் பெறும் வகையில் இயற்கை முறையில் பயிரிடப்பட்டுள்ள ஆமணக்கு செடி, கரும்பு விதை கரணை உற்பத்தியை ஆய்வு செய்து வேளாண் அனுபவம் குறித்து கேட்டறிந்தனர். பேரூராட்சி தலைவர் தங்ககுலோத்துங்கன் தலைமை தாங்கி மாணவர்களின் பயிற்சியை துவக்கி வைத்தார். பயிற்சி குழு மாணவர்கள் கபிலன், கவியரசன், கனகநிதி, கீர்த்திவேல், கிருஷ்னேஸ்வரன், மஞ்சுநாத், மோத்திஷ், முகுந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

