/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் மாணவர்கள் கிராம மதிப்பீடு நிகழ்ச்சி
/
வேளாண் மாணவர்கள் கிராம மதிப்பீடு நிகழ்ச்சி
ADDED : மே 05, 2024 03:27 AM
விருத்தாசலம், : கம்மாபுரம் ஊராட்சியில் வேளாண் மாணவர்களின் கிராமப்புற மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி நடந்தது.
வேப்பூர் அடுத்த கழுதுார் ஜெ.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், கம்மாபுரம் ஊராட்சியில் கிராமப்புற மதிப்பீடு வரைபட நிகழ்ச்சி நடத்தினர். கல்லுாரி முதல்வர் லட்சுமணன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் ஸ்ரீதரன், கலைவாணி, ஆண்டு ஒருங்கிணைப்பாளர் பிருந்தா தேவி முன்னிலையில் கிராம வரைபடம் வரைந்து பொது மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.
அதில், மக்கள் தொகை, விளை நிலங்கள், சாகுபடி பரப்பளவு, பயிர்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மாணவர்கள் முரளிதரன், பத்மதீஷ், பாண்டியதுரை, பிரபு, பிரவீன், பிரவீன்குமார், ராஜதுரை, ரஞ்சித்குமார், சரண் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.