/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேளாண் அமைச்சர் பிறந்த நாள் அழிச்சிக்குடியில் நலத்திட்ட உதவி
/
வேளாண் அமைச்சர் பிறந்த நாள் அழிச்சிக்குடியில் நலத்திட்ட உதவி
வேளாண் அமைச்சர் பிறந்த நாள் அழிச்சிக்குடியில் நலத்திட்ட உதவி
வேளாண் அமைச்சர் பிறந்த நாள் அழிச்சிக்குடியில் நலத்திட்ட உதவி
ADDED : ஆக 27, 2024 04:12 AM

புவனகிரி : வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு புவனகிரி அடுத்த அழிச்சிக்குடியில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஆத்மா திட்ட இயக்குனர் சாரங்கபாணி தலைமை தாங்கினார். ஊராட்சித் துணைத் தலைவர் இளையராஜா வரவேற்றார். கிளைச் செயலாளர்கள் பாலமுருகன், பாஸ்கர், மனோபாலா, மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி தென்னங்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கியதுடன், வண்டுராயன்பட்டு மனவளர்ச்சி குன்றிய உண்டு உறைவிட பள்ளியில் மதியம் உணவு வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிளை அவைத் தலைவர் சக்கரவர்த்தி, விவசாய அணி கோபாலகிருஷ்ணன், நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், சிவசிதம்பரம், மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.