/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு வேளாண் மாணவர்கள் பயிற்சி
/
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு வேளாண் மாணவர்கள் பயிற்சி
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு வேளாண் மாணவர்கள் பயிற்சி
ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு வேளாண் மாணவர்கள் பயிற்சி
ADDED : ஏப் 30, 2024 05:50 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் விவசாயிகளுக்கு ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து வேளாண் மாணவர்கள் பயிற்சி அளித்தனர்.
வேப்பூர் அடுத்த ஆவட்டியில் உள்ள ஜே.எஸ்.ஏ., வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி இறுதியாண்டு மாணவர்கள், கம்மாபுரம் பகுதியில் தங்கி, ஊரக வேளாண் பணி அனுபவ பயிற்சி பெறுகின்றனர். அவர்கள், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
கல்லுாரி முதல்வர் லட்சுமணன் தலைமை தாங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தட்சிணாமூர்த்தி, சுந்தரவடிவு, திட்ட பொறுப்பாளர்கள் ஸ்ரீதரன், கலைவாணி, ஒருங்கிணைப்பாளர் பிருந்தாதேவி ஆலோசனை வழங்கினர்.
வேளாண் மாணவர்கள் முரளிதரன், பத்மதீஷ், பாண்டியதுரை, பரபு, பிரவீன், பிரவீன்குமார், ராஜதுரை, ரஞ்சித்குமார், சரண் ஆகியோர் ட்ரோன் தெளிப்பு மூலம் அதிக மகசூல் பெறுவது, குறைந்த நேரத்தில் அதிக பரப்பளவில் மருந்து தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் தரப்பட்டது.

