/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 11, 2025 06:13 AM
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பரதுார் சாவடியில் அ.தி.மு.க.. கீரப்பாளையம் ஒன்றிய பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன் தலைமை தாங்கினார். விவசாய அணி மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் கமலக்கண்ணன், ஜெ., பேரவை துணைச் செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் ஒன்றிய செயலாளர் கோவி ராசாங்கம், கலை இலக்கிய அணி ஜெயபாலன், பேரவை ஒன்றிய இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளைச் செயலாளர் நாராயணன், ஒன்றிய பேரவை துணைச் செயலாளர் சங்கர் வரவேற்றனர். விவசாய அணி மாவட்ட செயலாளர் முன்னாள் ஒன்றிய துணைச் சேர்மன் கனகசிகாமணி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை வழங்கி பேசினர்.
கிளைச் செயலாளர்கள் ரவிச்சந்திரன், ராமச்சந்திரன், ஞானசேகரன், ராகுல்துரை, பாண்டியன், காமராஜ், பார்த்திபன், புருேஷாத், வைரமணி, இலக்கிய அணி மோகன், மாணவரணி ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வடப்பாக்கம், வெள்ளியக்குடி, ஒரத்துார், கிளியனுார், பரதுார், சாவடி ஆகிய பகுதி களுக்கு பூத் கமிட்டி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.