/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் போக்குவரத்திற்காக திறப்பு
/
ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் போக்குவரத்திற்காக திறப்பு
ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் போக்குவரத்திற்காக திறப்பு
ஆலப்பாக்கம் ரயில்வே பாலம் போக்குவரத்திற்காக திறப்பு
ADDED : ஆக 16, 2024 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சத்திரம்: விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் போக்குவரத்து பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டுள்ளது.
விழுப்புரம்-நாகப்பட்டினம் இடையே சாலை விரிவாக்க பணிக்கு நெடுஞ்சாலை துறை சார்பில் 6,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த சில ஆண்டுகளாக பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் பூண்டியாங்குப்பம் முதல் சட்டநாதபுரம் வரை உள்ள பகுதிகளில் நான்கு வழி சாலைப் பணிகள் 90 சதவீதத்திற்கு மேல் பணிகள் முடிந்துள்ளது. இதில், ஆலப்பாக்கம் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்து போக்குவரத்து பயன்பாட்டிற்காக நேற்று திறந்து விடப்பட்டது.