/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் ஓட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு; கடலுாரில் 19 பேர் போட்டியால்...

ADDED : ஏப் 02, 2024 05:17 AM

கடலுார் : கடலுார் லோக்சபா தொகுதியில் கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பகுப்பாய்வு செய்து அனுப்பி வைக்கும் பணி நடந்தது.
கடலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு தொகுதியிலும் தயார் நிலையில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தொகுதியில் 14 வேட்பாளர்கள் இருந்தால் மட்டுமே ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்த முடியும். அதற்கு மேல் இருந்தால், கூடுதலாக ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும். அதன்படி, கடலுார் தொகதியில் 19 பேர் போட்டியில் உள்ளதால், கூடுதல் ஓட்டு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கூடுதல் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பகுப்பாய்வு செய்து, அனுப்பி வைக்கும் பணி நடந்தது. அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்தம்புராஜ் முன்னிலையில் இப்பணி நடந்தது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் 6 சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அப்போது, டி.ஆர்.ஓ., ராஜசேகரன் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.