
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம் : திண்டிவனத்தில் மறைந்த நெல்மண்டி கண்ணன் யாதவ் மனைவி சாந்தா முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அன்னதானம் வழங்கப் பட்டது.
திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் நேற்று நடந்த நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரமேஷ் தலைமையில், சாந்தா படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சியில், ஐகோர்ட் அரசு சிறப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் ரேகா நந்தகுமார், சுதாகர், ஒப்பந்ததாரர் நந்தகுமார், கிேஷார், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி முருகன், திருப்பதியார் சரவணன், தெய்வசிகாமணி, கமலக்கண்ணன், பிரபாகரன், முருகேசன், பெருமாள், சாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோல் தாலுகா அலுவலகம் எதிரே பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது.

