/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம் 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம்
/
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம் 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம்
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம் 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம்
நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம் 11ம் தேதி தேர், 12ம் தேதி தரிசனம்
ADDED : ஜூலை 04, 2024 02:11 AM

சிதம்பரம்:சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனித்திருமஞ்சன தரிசன விழா, கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. 11ம் தேதி தேரோட்டம், 12ம் தேதி தரிசனம் நடக்கிறது.
கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் உலக அளவில் சிறப்பு பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது.
இங்கு, ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இருமுறை, தரிசன விழாக்கள் நடப்பது சிறப்பு. அந்த வகையில் ஆனித்திருமஞ்சன தரிசன வரும் 12ம் தேதி நடக்கிறது.
அதை முன்னிட்டு, நேற்று காலை கொடியேற்றத்துடன் தரிசன விழா துவங்கியது. நடராஜர் வீற்றிருக்கும் சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், உற்சவ ஆச்சாரியார் கிருஷ்ணசாமி தீட்சிதர் கொடியேற்றினார்.
தொடர்ந்து, தினமும் சாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இன்று (4ம் தேதி) வெள்ளி சந்திர பிறை வாகனம், 5ம் தேதி தங்க சூரிய பிறை வாகனம், 6ம் தேதி வெள்ளி பூதவாகனம், 7ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம் (தெருவடைச்சான்), 8ம் தேதி வெள்ளி யானை வாகனம், 9ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி ஊர்வலம் மற்றும்10ம் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா நடக்கிறது.
விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் 11ம் தேதி நடக்கிறது. தேரோட்டம் முடிந்த, தேர் நிலைக்கு வந்ததும், அன்று இரவு, தேரில் இருந்து, சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜர், ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருள செய்யப்பட்டு, ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது. ஆனிதிருமஞ்சன தரிசன விழாவான 12ம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் 6:00 வரையில், சிவகாமசுந்தரி அம்பாள் சமேத நடராஜருக்கு, மகாபிஷேகம் நடக்கிறது.
காலை 10:00மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:00 மணியளவில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேதராய் நடராஜர் நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சிதரும் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.