/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அண்ணா மேம்பால தார் சாலை இரண்டே மாதத்தில் பஞ்சரானது
/
அண்ணா மேம்பால தார் சாலை இரண்டே மாதத்தில் பஞ்சரானது
அண்ணா மேம்பால தார் சாலை இரண்டே மாதத்தில் பஞ்சரானது
அண்ணா மேம்பால தார் சாலை இரண்டே மாதத்தில் பஞ்சரானது
ADDED : செப் 05, 2024 04:16 AM

கடலுார், : கடலுார் அண்ணா மேம்பாலத்தில் தார் சாலை அமைத்து இரண்டே மாதத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் கெடிலம் ஆறு அண்ணா மேம்பாலம் வழியாக புதுச்சேரி,மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, விழுப்புரம், நாகப்பட்டினம்,சென்னை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த பாலத்தில் உள்ள இரும்பு இணைப்பு பட்டைகள் வெளியில் தெரிந்து, சாலை ஆங்காங்கே சேதமடைந்து காணப்பட்டது. இதையடுத்து, மேம்பாலத்தின் மேல் உள்ள சாலையை கடந்த ஜூன் மாதம் சீரமைக்கும் பணி நடந்தது.
இதற்காக, மேம்பாலத்தின் மேல் உள்ள தார் சாலையை இயந்திரங்கள் மூலம்பெயர்த்து எடுத்து கீரல் போட்டனர். பின், புதியதாக தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மீண்டும் மேம்பாலம் பகுதியில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. தார் சாலை புதியதாக போடப்பட்டு, இரண்டு மாதங்களே ஆன நிலையில், பள்ளம் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, மேம்பாலம் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.