/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாக்டர் சுரேஷ் கல்வி குழுமத்தில் ஆண்டு விழா
/
டாக்டர் சுரேஷ் கல்வி குழுமத்தில் ஆண்டு விழா
ADDED : மே 03, 2024 11:42 PM

விருத்தாசலம், - விருத்தாசலம் அடுத்த எருமனுார் டாக்டர் சுரேஷ் கல்வி குழுமத்தில் உள்ள இந்துமதி சுரேஷ் கல்வியியல் கல்லுாரி, சி.எஸ்.எம்., கலை மற்றும் அறிவியில் கல்லுாரி, டாக்டர் இ.கே.சுரேஷ் இன்ஸ்டியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் நிறுவனங்களில் 15வது ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு, கல்வி குழும நிறுவனர் மற்றும் தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். செயலாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், டீன் கவிபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்வியியல் கல்லுாரி முதல்வர் ரமேஷ் வரவேற்றார்.
ஒன்றிய துணை சேர்மன் பூங்கோதை, ஊராட்சி தலைவர் சவுமியா வீரமணி, ஒன்றிய கவுன்சிலர் சரவணன், தனபாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
திரைப்பட பின்னணி பாடகர் வேல்முருகன், விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், பட்டிமன்ற பேச்சாளர் வழக்கறிஞர் அருண் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர்.
கல்லுாரி முதல்வர் பழனிவேல் ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. மேலும், பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கல்லுாரி துணை முதல்வர் ஜேசுதாஸ் விழாவை தொகுத்து வழங்கினார்.
இன்ஸ்டியூட் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ் முதல்வர் ஞானசுந்தரி நன்றி கூறினார்.