/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் ஆண்டு விழா
/
வள்ளி விலாஸ் ஆலயா பள்ளியில் ஆண்டு விழா
ADDED : பிப் 22, 2025 10:12 PM

கடலுார் : நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு ஸ்ரீ வள்ளி விலாஸ் ஆலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மழலையர்களுக்கான ஆண்டு விழா நடந்தது.
கடலுார் விருக்ஷா மழலையர் பள்ளி தாளாளர் தனலட்சுமி சீனுவாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று துவக்கி வைத்தார். இதில், குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆரோக்கிய உணவுகளின் நன்மைகள் குறித்து சிறுவர்கள் நாடகம் மூலம் உணர்த்தினர்.
கீ போர்டு வாசித்தல் மற்றும் யோகா போன்றவைகள் நிகழ்த்தி அசத்தினர். மாணவர்களுக்கு பரிசு மற்றும்சான்றிதழ் வழங்கப்பட்டது.
அப்போது, பள்ளி முதல்வர் சீனுவாசன், தாளாளர் இந்துமதி சீனுவாசன், உதவி தலைமை ஆசிரியை மீனா ராஜேந்திரன் மற்றும் கல்வி ஒருங்கிணைப்பாளர்ரமேஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.