ADDED : ஜூன் 14, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நடந்த தேர்பவனியில் ஏராளமான கிறிஸ்தவர்கள்பங்கேற்றனர்.
கடலுார், சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழா கடந்த 1ம் தேதி திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. 4 மற்றும் 11,13 ஆகிய தேதிகளில் திருப்பலி நடந்தது.
முக்கிய விழாவான நேற்று வண்ண விளக்குளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, தேர் முக்கிய வீதிகள் வழியாகசென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டுவழிபாடு செய்தனர்.