/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா
/
தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழா
ADDED : ஆக 08, 2024 11:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிள்ளை: சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், ஓய்வுப்பெற்ற தேர்வுத்துறை அலுவலருக்கு பாராட்டு விழாநடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு துறையில், கணினி பிரிவு அலுவலராக இருந்த முருகன் கடந்த மாதம் ஓய்வுப்பெற்றார். அவருக்கு, சிதம்பரம் முத்தையா நகர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் நேற்று பாராட்டு விழா நடந்தது.பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஞானகுமார், பாலகுமார் ஆகியோர் முருகனை பாராட்டி பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியில் லதா, பிரியா, அஞ்சம்மாள், சுமதி, அரியக்கொடி முத்தையன், கார்த்திக்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.