/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கேலோ இண்டியா போட்டியில் தங்கம் வென்ற அண்ணாமலை பல்கலை., அணிக்கு பாராட்டு விழா

ADDED : மே 02, 2024 11:25 PM

சிதம்பரம்: கேலோ இண்டியா போட்டியில், தங்கப்பதக்கம் வென்ற சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணிக்கு, பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண்கள் கால்பந்து அணியினர், கடந்த மாதம் அசாமில் நடந்த கேலோ இண்டியா பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் பங்கேற்று, தங்க பதக்கம் வென்றனர். அவர்களுக்கு, பல்கலைகழக வளாகத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குநர் ராஜசேகரன் வரவேற்றார். துணைவேந்தர் கதிரேசன், பெண்கள் கால்பந்து அணியினருக்கு பொன்னாடை அணிவித்து, கேடயங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்.
பதிவாளர் சிங்காரவேல், கல்விப்புல முதல்வர் குலசேகரபெருமாள் பிள்ளை, கால்பந்து அணி பயிற்றுனர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, ஜனவரி மாதம், டில்லியில் நடந்த குடியரசு தின விழாவில் நடந்த அணிவகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கு துணைவேந்தர் கேடயம் வழங்கி பாராட்டினார்.
விளையாட்டுத்துறை இணை இயக்குனர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார்.