/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி ராகவேந்திரர் இல்லத்தில் ஆராதனை விழா
/
புவனகிரி ராகவேந்திரர் இல்லத்தில் ஆராதனை விழா
ADDED : ஆக 23, 2024 12:38 AM

புவனகிரி : புவனகிரி ராகவேந்திரர் அவதார இல்லத்தில், மூன்று நாட்கள நடந்த ஆராதனை விழா நேற்று நிறைவு பெற்றது.
புவனகிரியில் ்ராகவேந்திரர் பிறந்த அவதார இல்லம் கோவிலாக நிர்மாணிக்கப்பட்டு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் அவரது இல்லத்தில் ஆராதனை விழா நடத்தி வருகின்றனர்.
தற்போது 37ம் ஆண்டு ஆராதனை விழா, 20ம் தேதி பூர்வ ஆராதனையுடன் துவங்கியது. நேற்று முன்தினம் புண்ணிய ஆராதனையும், நேற்று உத்தர ஆராதனையும் நடந்தது.
மூன்று தினங்களும் அதிகாலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், வேத பாராயணம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் நிகழ்ச்சி துவங்கியது.
சுவேத நதி தீர்த்தத்துடன், மந்திராலயம் மரபு படி, அபிஷேக, அலங்காரம், தீப ஆராதனை நடத்தினர்.
தொடர்ந்து அன்னதானம் வழங்கினர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரினம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

