/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
122 மையங்களில் பிளஸ் 2 தேர்வு 30,159 மாணவர்கள் எழுத ஏற்பாடு
/
122 மையங்களில் பிளஸ் 2 தேர்வு 30,159 மாணவர்கள் எழுத ஏற்பாடு
122 மையங்களில் பிளஸ் 2 தேர்வு 30,159 மாணவர்கள் எழுத ஏற்பாடு
122 மையங்களில் பிளஸ் 2 தேர்வு 30,159 மாணவர்கள் எழுத ஏற்பாடு
ADDED : மார் 03, 2025 07:33 AM

கடலுார் : கடலுார் மாவட்டத்தில 122 தேர்வு மையங்களில் நடக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்வை 30,159 மாணவர்கள் எழுத உள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று துவங்கி, வரும் 25ம் தேதி வரை நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில், 246 பள்ளிகளைச் சேர்ந்த 30,159 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதற்காக 122 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கடலுார் கல்வி மாவட்டத்தில் 134 பள்ளிகளில் 8,676 மாணவர்கள், 9,119 மாணவிகள் என மொத்தம் 17,795 பேர் 67 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 112 பள்ளிகளில் இருந்து 6,273 மாணவர்கள், 6,091 மாணவிகள் என மொத்தம் 12,364 பேர் 55 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.
தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம் மற்றும் உரிய நேரத்திற்கு மாணவர்கள் செல்ல போக்குவரத்து வசதிகள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் மாணவர்கள், கண்காணிப்பு அலுவலராக செல்லும் ஆசிரியர்கள் மொபைல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். தேர்வு பணியில் 128 முதன்மை கண்காணிப்பாளர்கள், 128 துறை அலுவலர்கள், 1,567 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், 302 பறக்கும் படை அலுவலர்கள் என, 2,153 ஆசிரியர்கள், அலுவலர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.