ADDED : ஜூலை 12, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: ராமநத்தம் அருகே சப் இன்ஸ்பெக்டரிடம் தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம் சப் இன்ஸ்பெக்டர்கள் கலியமூர்த்தி நேற்று காலை 11:00 மணிக்கு வழக்கு விசாரணைக்காக ஆக்கனுார் கிராமத்திற்கு சென்றனர்.
விசாரணை முடிந்து திரும்பும் வழியில் பஸ் நிலையம் அருகே அதே கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன்,34, மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் சண்டை போட்டுக்கொண்டிருந்தனர்.
அவர்களை சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தி, எச்சரித்தார். அப்போது சுப்ரமணியன், சப் இன்ஸ்பெக்டர் கலியமூர்த்தியை ஆபாசமாக திட்டி, சட்டையை பிடித்து தகறராறில் ஈடுபட்டார்.
ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து சுப்ரமணியனை கைது செய்தனர்.