ADDED : ஆக 19, 2024 11:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: முன்விரோதம் காரணமாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த வல்லம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி, 34; அதே பகுதியைச் சேர்ந்தவர் சாமிதுரை, 50; இருவருக்குமிடையே முன்விரோதம் உள்ளது.
கடந்த 17ம் தேதி காலை தட்சணாமூர்த்தி வீட்டிற்கு பைக்கில் செல்லும் போது சாமிதுரை வழிமறித்து திட்டி, தாக்கினார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நேற்று முன்தினம் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து சாமிதுரையை கைது செய்தனர்.

