/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது
/
முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது
ADDED : ஜூன் 04, 2024 06:14 AM
பண்ருட்டி : பண்ருட்டி அருகே முன்விரோத தகராறில், முதியவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த மேலிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் தமிழரசன்,33; கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி, அவரிடம் இருந்து பிரிந்து சென்று விட்டார். அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகன் நடராஜன் தான் இதற்கு காரணம் என கூறி, தமிழரசன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, வெங்கடேசனை தமிழரசன், இரும்பு குழாயால் தாக்கினார். காயமடைந்த வெங்கடேசன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழரசனை, 33; கைது செய்தனர்.