/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தம்; கடலுாரில் போலீஸ் நடவடிக்கை
/
ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தம்; கடலுாரில் போலீஸ் நடவடிக்கை
ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தம்; கடலுாரில் போலீஸ் நடவடிக்கை
ேஷர் ஆட்டோக்கள் நிறுத்தம்; கடலுாரில் போலீஸ் நடவடிக்கை
ADDED : மே 22, 2024 11:21 PM

கடலுார் : கடலுாரில் பிரதான சாலையில் ேஷர் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கடலுார் தலைமை தபால் நிலையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மஞ்சக்குப்பம் செல்லும் சாலை உள்ளது.
இச்சாலை வழியாக கோர்ட், எஸ்.பி., அலுவலகம், கருவூலம், அரசு அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு அதிகாரிகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு மாணவர்கள் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், பாரதி சாலையில் இருந்து மஞ்சக்குப்பம் சாலை துவங்கும் பகுதியில் ேஷர் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர்.
இதனால், சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். அப்பகுதியில் ேஷர் ஆட்டோக்கள் தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசாருக்கு எஸ்.பி., ராஜாராம் உத்தரவிட்டார்.
இதையடுத்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் 50 மீட்டர் துாரத்திற்கு சாலையோரத்தில் பேரிகார்டுகள் வைத்து ேஷர் ஆட்டோக்கள் நிறுத்துவது மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் வைப்பதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

