தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை

உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை

உதவியாளர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : ஜூலை 05, 2026 04:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 04:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சி எலக்ட்ரீஷியன் உதவியாளர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர், திராட்சை தெருவை சேர்ந்தவர் பஞ்சாட்சரம் மகன் தண்டபாணி, 59. நகராட்சி எலக்ட்ரீஷியன் உதவியாளர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். ராஜலட்சுமி, கடந்த 3ம் தேதி மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.

வெகுநேரமாகியும் தண்டபாணி கதவை திறக்காததால், சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது, மின் விசிறியில் துாக்கில் தொங்கிய நிலையில் தண்டபாணி இறந்து கிடந்தார். தகவலறிந்த விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பாபு உள்ளிட்ட போலீசார் சடலத்தை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us