ADDED : ஆக 06, 2024 07:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ஆட்டுத்தொட்டி தெருவை சேர்ந் தவர் வில்லவன், இவரது சகோதரியை மணவெளியை சேர்ந்த ஆகாஷ் என்பவர் காதலித்து திருமணம் செய்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால், மணவெளியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, மணவெளி கோவில் அருகே சென்ற வில்லவன், அவரது தங்கையை திருமணம் செய்த ஆகாஷ் இருவரையும், அப்பகுதியை சேர்ந்த கிருஷ்ணராஜ், பிரகாஷ், ஜோதி, சுரேஷ் என்கிற ராஜதுரை, சிம்ம விஷ்ணு, தமிழறிவு ஆகியோர் தாக்கினர்.
இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து சிம்மவிஷ்ணுு, 33; சுரேஷ் என்கிற ராஜதுரை,30; தமிழறிவு 28; ஆகியோரை கைது செய்தனர்.