/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்கு
/
தனியார் நிதி நிறுவன ஊழியர் மீது தாக்கு
ADDED : செப் 01, 2024 05:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி : திட்டக்குடி அருகே கடன் தவணையை வசூலிக்கச்சென்ற தனியார் நிதிநிறுவன ஊழியரை, தாக்கிய தாய், தந்தை, மகன் ஆகிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மருதத்துார் கிராமத்தை சேர்ந்தவர் ராஜவேல் மகன் விமல்ராஜ்,26. தனியார் நிதிநிறுவன ஊழியர். இவர் கடந்த 30ம் தேதி, தொளார் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த பழனிசாமியிடம், நிறுவனம் கொடுத்த கடனுக்கான தவணை வசூலிக்க சென்றார். அப்போது பழனிசாமி, அவரது மனைவி அமுதா, மகன் ஆகாஷ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விமல்ராஜை திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர்.
புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.