/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; பெண்ணாடத்தில் 3 பேர் கைது
/
5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; பெண்ணாடத்தில் 3 பேர் கைது
5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; பெண்ணாடத்தில் 3 பேர் கைது
5 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி; பெண்ணாடத்தில் 3 பேர் கைது
ADDED : ஏப் 27, 2024 04:26 AM
கடலுார் : பெண்ணாடத்தில் 5 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் இறையூர் ஓம் சக்தி ரைஸ் மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்துள்ளதாக தகவல் கிடைத்தது. கடலுார் குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை இன்ஸ்பெக்டர் சுகுணா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
அதில், 1,250 கிலோ ரேஷன் அரிசியும், 3,800 கிலோ ரேஷன் அரிசியை அரைத்து குருணையாக்கி பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக பெரம்பலுார் மாவட்டம், குன்னம் அடுத்த வைலப்பாடி மதுபாலன், 49; அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த குழுமூர் மணிகண்டன், 38; அம்புரோஸ், 55; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.