/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பத்தில் தெருவிளக்குகளை இயக்க தானியங்கி சுவிட்சுகள் பொருத்தம்

ADDED : ஆக 02, 2024 10:48 PM

நெல்லிக்குப்பம், -நெல்லிக்குப்பம் நகராட்சியில் தெருவிளக்குகளை இயக்க தானியங்கி சுவிட்சுகள் பொறுத்தியதால் மின் கட்டணம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் 2,500 க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் பராமரிக்கபடுகின்றன.
இவற்றை இயக்க 125 இடங்களில் சுவிட்சுகள் உள்ளன.
இவற்றை மாலை நேரங்களில் போடவும் காலையில் நிறுத்தவும் தொழிலாளர்கள் பல கிலோமீட்டர் துாரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட நேரத்துக்கு நிறுத்த முடியாததால் மின்சாரம் அதிகம் செலவாவதால் மின் கட்டணம் அதிகரிக்கிறது.இதை சரி செய்ய தானியங்கி சுவிட்ச்கள் பொறுத்த முடிவு செய்தனர். அதற்கான பணி நடக்கிறது.
இந்த சுவிட்ச்கள் மூலம் மாலை 6 மணிக்கு தானாகவே லைட்கள் எரியவும், காலை 6 மணிக்கு தானாகவே விளக்குகள் நிறுத்தப்பட்டுவிடும் படி ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனால் நகராட்சிக்கு மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் மிச்சமாகும் என அதிகாரிகள் கூறினர்.
சில ஆண்டுகளுக்கு முன் இதுபோல் தானியங்கி சுவிட்சுகள் பல லட்சம் செலவில் பொறுத்தினர்.அவை ஒரு சில மாதங்களிலிலேயே பழுதாகியது.அதேபோல் தற்போதும் நடக்காமல் தொடர்ந்து பராமரிப்பது நல்லது.