/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வி ஸ்கொயர் மால் உரிமையாளருக்கு விருது
/
வி ஸ்கொயர் மால் உரிமையாளருக்கு விருது
ADDED : மார் 08, 2025 02:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷிற்கு விருது வழங்கப்பட்டது.
கடலுார், சின்னகங்கணாங்குப்பம் இம்மாகுலேட் மகளிர் கல்லுாரியில் மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. விழாவில், கடலுார் வி ஸ்கொயர் மால் உரிமையாளர் அனிதா ரமேஷிற்கு சிறந்த பெண் சாதனையாளர் விருதை, மாநகர கமிஷனர் அனு, அருட்சகோதரி நிர்மலா ராணி, சங்கத்தின் சாசன தலைவர் டாக்டர் ராஜேந்திரன் முன்னாள் உதவி ஆளுநர் அப்பர்சாமி, வெங்கடேஷ் ஆகியோர் வழங்கினர்.
விழாவில், முன்னாள் தலைவர்கள் ஆசைத்தம்பி, ரவி, சங்கத் தலைவர் முருகன், செயலாளர் சுப்பிரமணி, கிருஷ்ணராஜ், பார்த்திபன், டாக்டர் வினோத் உட்பட பலர் பங்கேற்றனர்.