/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருதை விகாஸ் பள்ளி 10ம் ஆண்டு துவக்க விழா
/
விருதை விகாஸ் பள்ளி 10ம் ஆண்டு துவக்க விழா
ADDED : ஜூன் 25, 2024 07:22 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் மணலுார் விருதை விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பத்தாம் ஆண்டு துவக்க விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ஆசாத் அலி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., கதிரொளி அருண் முன்னிலை வகித்தார்.
முதல்வர் தனலட்சுமி வரவேற்றார். இதில், டாக்டர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மொபைல் போன்களால் ஏற்படும் பாதிப்புகள், பாதுகாப்பாக பைக் ஓட்டுவது, பெற்றோர் குழந்தைகளின் உறவு குறித்து பேசி, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
விழாவில், நடப்பாண்டு துவங்கப்பட உள்ள இ.சி.ஏ., வகுப்புகளான ஸ்கேட்டிங், சிலம்பம், பரதநாட்டியம் ஆகிய வகுப்புகளுக்கான முன்மாதிரி விழா நடந்தது.