ADDED : ஜூன் 16, 2024 06:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி, உணவு பாதுகாப்பு துறை மற்றும் சிதம்பரம் வர்த்தக சங்கம் சார்பில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கூட்டத்திற்கு வர்த்தகர் சங்க தலைவர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் கைலாஷ்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், நல்லத்தம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர். நகராட்சி பொறியாளர் சுரேஷ், துப்புரவு அலுவலர் சுவாமிநாதன், அப்துல் ரியாஸ், மூசா, கணேஷ் மற்றும் பல வணிகர்கள் கலந்து கொண்டனர்.