/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்
/
ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான்
ADDED : மார் 23, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி கடலுாரில் நடந்தது.
மஞ்சக்குப்பம் டவுன் ஹாலில் இருந்து நேற்று காலை துவங்கிய மாரத்தான் போட்டியை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பாரதி ரோடு, பீச் ரோடு, வண்ணாரப்பாளையம் வழியாக சில்வர் பீச்சில் முடிந்தது.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., அபிநயா, மகளிர் திட்டம் அலுவலர் சுருதி, மாவட்ட சமூக அலுவலர் கோமதி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

