
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : லோக்சபா தேர்தலில், பொதுமக்கள் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், விருத்தாசலத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணியை, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சையத் மெஹ்மூத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கால்பந்து பயிற்றுனர் அறிவழகன் மற்றும் மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
விருத்தாசலம் மினி விளையாட்டு மைதானத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் விளையாட்டு மைதானம் வந்தடைந்தது.
இதில், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, என் வாக்கு என் உரிமை என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, மாணவர்கள், விளயைாட்டு வீரர்கள் ஊர்வலமாக சென்றனர்.

