ADDED : செப் 01, 2024 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் ரோட்டரி சங்கம், ஆண்டனி பப்ளிக் பள்ளி, டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியன சார்பில், கண் தானம் குறித்த விழிப்புணர்வு பேரணி விருத்தாசலத்தில் நடந்தது.
ரோட்டரி சங்க தலைவர் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஸ்ரீ ஜெயின் ஜூவல்லரி உரிமையாளர் தீபக்சந்த் முன்னிலை வகித்தார்.
நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் பேரணியை துவக்கி வைத்தார்.இதில், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் பிரவீனா கண்ணன், ஆண்டனி பப்ளிக் பள்ளி முதல்வர் லிடியா ஜார்ஜ், ரோட்டரி நிர்வாகிகள் பிரகாஷ், ஜாகிர் உசேன், ராஜா, பிரவீன், சம்பத் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
பஸ் நிலையத்தில் இருந்துஜங்ஷன் ரோடு வழியாக பாலக்கரைவரை பேரணிசென்றனர்.
ரோட்டரி சங்க செயலாளர் பேராசிரியர் பரமசிவம் நன்றி கூறினார்.