/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்
/
மகளிர் தினத்தையொட்டி விழிப்புணர்வு ஓட்டப்பந்தயம்
ADDED : மார் 09, 2025 05:58 AM

கடலுார் : சர்வதேச மகளிர் தின விழாவையொட்டி, கடலுார் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நெடுந்துார ஓட்ட பந்தயம் நடத்தப்பட்டது.
தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு எஸ்.பி., ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மாநகராட்சி கமிஷனர பங்கேற்று, ஓட்டப் பந்தயத்தை துவக்கி வைத்தார்.
கடலூர் மாவட்ட பெண் போலீசார், கந்தசாமி நாயுடு மகளிர் கல்லுாரி, ஜெயின்ட் ஜோசப் கல்லூரி, இமாகுலேட் மகளிர் கல்லூரி, தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரி மாணவிகள் உள்ளிட்ட 300 பேர் பங்கேற்றனர்.
ஓட்டப்பந்தயத்தில் மாணவி யாழினி முதலிடம் பிடித்தார். இரண்டாம் இடத்தை மாணவிகீர்த்திகா, மூன்றாம் இடம் மாணவி தேவி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி., நல்லதுரை, டி.எஸ்.பி.,க்கள் பார்த்தீபன், அப்பண்டைராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ரேவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.