/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
/
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு பயிற்சி முகாம்
ADDED : மார் 09, 2025 05:38 AM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் அட்சயா மந்திர் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு மற்றும்விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடந்தது.
பள்ளி தாளாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் வசந்தி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு குறித்து விளக்கி பேசினார். கருத்தாளர்கள்,சசிகுமார், கீதா, ராஜ உமா ஆகியோர் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு, போக்சோ சட்டம் குறித்து விளக்கி கூறினர்.
கடலூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் இளங்கோவன், போக்சோ சட்டம், மாவட்ட குழந்தைகள் நலக்குழு செயல்படும் விதம், குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் மற்றும் இணைய வழி குற்றங்களுக்கான பாதுகாப்பு உதவி எண், பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு சுவரொட்டிகளை ஆசிரியர்களுக்கு வழங்கினார்.
பரங்கிப்பேட்டை வட்டார கல்வி அலுவலர் கந்தசாமி நன்றி கூறினார்.