/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் உறுதி
/
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் உறுதி
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் உறுதி
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் மா.கம்யூ., பாலகிருஷ்ணன் உறுதி
ADDED : ஏப் 20, 2024 06:19 AM
சிதம்பரம்,: மத்தியில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என, சிதம்பரத்தில், ஓட்டளித்த மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
சிதம்பரம் லோக்சபா (தனி) தொகுதியில் காலை முதல் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளி ஓட்டுச்சாவடியில் மா.கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், அவரது மனைவி, மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் வந்து ஓட்டளித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், கடந்த 2019 தேர்தலை விட, இத்தேர்தலில், 40 தொகுதியிலும் இண்டியா கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர். வாக்காளர்கள், ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர்.
மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது. தமிழகத்தில் தி.மு.க., தலைவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், கூட்டணி தலைவர்களின் பிரசாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்னைகளை முன்னிறுத்தியுள்ளது.
இது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். சிதம்பரம் தொகுதியில் வி.சி., தலைவர் திருமாவளவன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றார்.

